Wednesday 18 May 2011

அசோகவனம்


இயற்கையால் படைக்கப்பட்ட ஒரு உணர்வால் இனம் பெருகுவது ஒரு புறமிருக்க, 

சில உணர்வுகளால் இனம் அழிகிறது...
மனித இனம் துடித்து துடித்து அழுகிறது...

அன்று ஆங்காங்கே சரித்திரமாய் தெரிந்த அழிவுகள்,

இன்று சம்பவங்களாய், 
சராசரிகலாய்,
மிகவும் பழகிப் போய் சாதாரனங்கலாய்,

எத்தனை அறிஞர்கள்? எத்தனை கவிஞர்கள்?...
எழுதி வைத்த தத்துவங்கள் ஏட்டோடு?
கற்று வந்த கல்வி காற்றோடு...

அவற்றை தொடர்வதற்கு... வேண்டாம்... வேண்டாம்...
நினைப்பதற்கும் நேரமில்லையோ?...
உயிரின் விலை அத்தனை மலிவா?...
மானுடமே,
நேயத்தின் ருசி கசந்தா கிடக்கிறது?...

இன்னும் கேட்கும்...