Sunday 28 September 2014

ஆதாமும் நியூட்டனும் - 3). அசைவு

அசைவு


ஆக மொத்தம் உலகின் அத்தனை நிகழ்வுகளும் அசைவு என்ற ஒரு வார்த்தைக்குள் அடங்கி விடுகின்றன.

சிரிப்பதும் அசைவு.
அழுவதும் அசைவு.

பசிப்பதும் அசைவு.
ருசிப்பதும் அசைவு.

அடிப்பதும் அசைவு.
துடிப்பதும் அசைவு.


காப்பதும் அசைவு.
அழிப்பதும் அசைவு.

வருவதும் அசைவு.
போவதும் அசைவு.

எல்லாமே அசைவுகள்தான். 


விதையின் அசைவு வேர்.
வேரின் அசைவு தாவரம்.

மரத்தின் அசைவு காற்று.
மனதின் அசைவு எண்ணம்.

சக்கரத்தின் அசைவு பயணம்.
சமுத்திரத்தின் அசைவு அலை.

பூவின் அசைவு பழம்.
பூமியின் அசைவு நாள்.


எந்திரத்தின் அசைவு உற்பத்தி.
இதயத்தின் அசைவு உயிர்த்துடிப்பு.

எல்லாமே அசைவுகள்தான். 

ஒவ்வொரு அசைவும் ஒவ்வொரு செயல்.
பிறப்பும் இறப்பும்கூட அசைவுக்குள் அடக்கம்.

அசைவுகளே நிகழ்வுகளைத் தீர்மானிக்கின்றன.

எங்கெல்லாம் ஒரு மாற்றம் தேவையோ,
அங்கெல்லாம் ஓர் அசைவு தேவைப் படுகிறது.

மனிதரின் பார்வையில் ஒவ்வொரு அசைவும் ஒவ்வொரு செயல்.
ஆகாயத்தின் பார்வையில் எல்லா செயலும் வெறும் அசைவுதான்.