Thursday 14 November 2013

ஆதாமும் நியூட்டனும் - 2). சக்தி

சக்தி


கண் இமைப்பதிலிருந்து கல் உடைப்பது வரை சக்தியில்லாமல் செயலாவதில்லை.

சக்தியே செயலாகிறது.

சக்தியே பலனாகிறது.

பிராணன் என்று சொல்லப்படும் உயிர்ச்சக்தி, 

VITAL FORCE என்று அறிவியல் சொல்லும் அந்த சக்தி. 

அது இல்லையேல் எந்த இயக்கமும் வெளிப்படாது.


எல்லா அசைவுகளும் சக்தியாலேயே நிகழ்கின்றன.

நம் உடலை நாம் இயக்குவதற்கே சக்தி தேவை.

உலகில் விரவிக்கிடக்கின்ற சக்தியை ஒன்றிணைத்து ஒரு கம்பிக்குள் கொண்டு வரும் 

முயற்சியே மின்சாரம்.


இந்து தருமத்தில் பெண்ணை “சக்தி” என்றும், “சக்தியின் அம்சம்” என்றும் வழிபடுகிறார்கள்.

அவள் பூமியின் ஒரு வடிவம் என்று புகழுரைக்கிறார்கள்.


பூமி எப்படி எல்லாப் பொருள்களையும் தன்னை நோக்கி ஈர்த்துக் கொள்கிறதோ, அதேபோல் 

பெண்ணும் எல்லாவற்றையும் தன்னுள் ஈர்க்கும் சக்தி படைத்தவள்.


இதில் இனபேதமே இல்லை.

ஆணோ, பெண்ணோ, இரண்டையுமே ஈன்றெடுப்பது பெண்தான்.





ஆதாமும் நியூட்டனும் - 1). ஈர்ப்பு

ஆதாமும் நியூட்டனும்

ஈர்ப்பு.

இருவரும் ஆப்பிளால் ஈர்க்கப் பட்டவர்கள் என்று படித்திருக்கிறோம்.

ஒருவருக்கு வேதம் சாட்சி. 

இன்னொருவருக்கு விஞ்ஞானம் சாட்சி.

இருவருமே புரிந்து கொண்டது ஈர்ப்பைத்தான்.


நியூட்டன் புரிந்து கொண்டது பூமியைப் பற்றி.

ஆதாம் புரிந்து கொண்டது உடலைப் பற்றி.


இதில் ஆண், பெண் என்ற பேதத்துக்கு இடமில்லை.

ஆக மொத்தம் உடலுக்கே ஒரு ஈர்ப்பு உண்டு.


ஏனென்றால் உடல், பூமியின் மிகச் சிறிய வெளிப்பாடு. 

பூமி உடலின் மிகப் பெரிய வெளிப்பாடு.


பூமியில் உள்ள அத்தனையும் உடலில் உண்டு.

கல், மண் போன்ற எலும்பு,

தண்ணீர் போன்ற இரத்தம், உமிழ்நீர், வியர்வை.

நெருப்பாக உஷ்ணம்.

வாயுவாக சுவாசம்.

ஆகாயமாக மனம்.

இயற்கை பல வழிகளில் ஒரே உண்மையைத் தான் போதிக்கிறது.

எல்லாமே ஏதோ ஒரு பொருளில் ஈர்க்கப் படுகிறோம்.


எதுவுமே வேண்டாம் என்று போன புத்தரும் கூட துறவறத்தால் ஈர்க்கப் பட்டார்.


ஒரு பொருள் மீது ஏற்படும் ஈர்ப்பின் வலிமை மட்டுமே

அதை அடையும் வழியைக் காட்டுகிறது.


அழகு கண்ணை ஈர்க்கிறது.

இனிய இசை காதை ஈர்க்கிறது.

மணம் நாசியை ஈர்க்கிறது.

சுவை நாவை ஈர்க்கிறது.

ஸ்பரிசம் உடலை ஈர்க்கிறது.

இத்தனை வழிகளில் உலகம் மனதை ஈர்க்கிறது.

ஒன்றை ஒன்று ஈர்ப்பதே இயற்கை.


ஈர்ப்பு என்பது ஒரு நியதி.

ஈர்ப்பு என்பது ஒரு நிகழ்வு.


ஈர்ப்பு என்பதே சக்தி.