Wednesday 28 January 2015

என் இந்திய தேசம்

தியாகத்தை காவியிலும்,
தூய்மையினை வெண்மையிலும்,
பசுமையினை பச்சையிலுமாய்,
மேலான நெறிமுறையை வகுத்திட்ட தேசம்.
வீரத்தை காவியிலும்
சத்தியத்தை வெண்மையிலும்,
நம்பிக்கையை பச்சையிலுமாய்
உள்ளார்ந்த வாழ்நெறியை தொகுத்திட்ட தேசம்.
அர்ப்பணிப்பைக் காவியிலும்,
உண்மையினை வெண்மையிலும்
மருத்துவத்தைப் பச்சையிலுமாய்
பலநூறு கலையோடு மொழிகொண்ட தேசம்.
ஞானத்தை காவியிலும்
சாந்தியினை வெண்மையிலும்,
செம்மையினை பச்சையிலுமாய்,
நேர்கொண்ட சன்மார்க்க வழிகண்ட தேசம்
அன்புதனைக் காவியிலும்,
அஹிம்சையினை வெண்மையிலும்
புணர்ப்பினை பச்சையிலுமாய்,
மெய்யான வளர்ச்சிக்கு வித்திட்ட தேசம்
இந்துத்துவத்தை காவியிலும்
கிறிஸ்தவத்தை வெண்மையிலும்,
இஸ்லாமை பச்சையிலுமாய்,
வேற்றுமையில் ஒற்றுமையைக் கற்பித்த தேசம் - இது
முன்னோர்க்கு முன்னோரை முந்திய தேசம். - என்றும்
மூவாத தாயாம் என் இந்திய தேசம்.

No comments:

Post a Comment